கத்தார்‌ 2022 FIFA கால்பந்து போட்டிகளை நடத்த இப்பொழுதே தயார்..!

Qatar will be ready for fifa world cup.

கத்தார் நாட்டில் நடைபெற இருக்கும் 2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த கத்தார் இப்பொழுதே தயாராகிவிட்டதாக FIFA தலைவர் கியான்னி இன்பானிட்டோ (Gianni Infantino) தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடக்கவிற்கும் 2022 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை முன்னேற்பாடுகளை புகழ்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மத்திய கிழக்கு நாடுகளில் முதன்முதலில் நடக்கும் உலகின் மிகப்பெரிய கால்பந்து போட்டித் தொடராகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கத்தார் நாட்டில்‌ WOQOD தனது 105 வது‌‌ பெட்ரோல் நிலையத்தை திறந்தது..!

மேலும், கத்தாரில் நடக்க இருக்கும் 2022 FIFA உலகக் கோப்பை போட்டி சிறந்த ஒரு நிகழ்வாக இருக்கும் என்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். கத்தாரில் விளையாட்டு மைதானங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை சிறந்த முறையில் இயங்கி  வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.