கத்தாரில் ஷூரா கவுன்சிலின் நாடாளுமன்ற நட்புக் குழு கூட்டம்..!

Qatari-British-parliamentary-ties-reviewed.

ஷூரா கவுன்சிலின் (Shura Council) கத்தார்-ஐரோப்பிய நாடாளுமன்ற நட்புக் குழு கூட்டம் நேற்று (17-02-2020) குழுவின் தலைவரான யூசெப் பின் ரஷீத் அல்-காதர் (HE the Chairman of the Group Yousef bin Rashid al-Khater) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஷூரா கவுன்சிலுக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகள் குறித்தும் மற்றும் அவற்றை ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் வழிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இதில் ஷூரா கவுன்சிலின் நட்புக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இங்கிலாந்து – கத்தார் தூதர் யூசெப் பின் அலி அல்-காதர் (Yousef bin Ali al-Khater) ஆகியோர் கலந்து கொண்டனர்.