கத்தார் அனுப்பிய மருத்துவ உதவிகள் துனிசியாவிற்கு வந்தடைந்தது.!

The Qatari plane carrying urgent medical aid at Tozeur International Airport in Tunisia.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்து போராட துனிசியாவில் உள்ள சகோதரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவாக, துனிசியாவின் சகோதர குடியரசிற்கு அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Sheikh Tamim bin Hamad al Thani) அவர்கள் உத்தரவையடுத்து, அவசர மருத்துவ உதவியைக் கொண்ட கத்தார் விமானம் நேற்று (02-05-2020) துனிசியா Tozeur சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இந்த உதவியில், கத்தார் பாதுகாப்பு அமைச்சகம், துனிசியா தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திற்காக 10/80 மீட்டர் பரப்பளவில், கள (Field) மருத்துவமனையை வழங்கியுள்ளது. இதில், 100 படுக்கைகளும் மற்றும் 20 வென்டிலேட்டர்களும் உள்ளடங்கும் என்று தெரிவித்துள்ளது.

Source : The Peninsula Qatar