மூன்று ஆண்டுகளுக்கு பின் முதல் கத்தார் வாகனம் இன்று சவுதிக்குள் நுழைந்தது.!

Qatari vehicle enters Saudi
Pic: alarabia

கத்தார், சவுதி அரேபியா இடையே உள்ள Abu Samra எல்லை வழியாக முதல் கத்தார் வாகனம் இன்று (09-01-2021) சவுதி அரேபியாவுக்குள் நுழைந்துள்ளது என சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அல்-அக்பரியா (Al-Akhbariya) சேனல் கத்தாரில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் ஒரு கார் நுழைவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது. இதனை சவுதி அதிகாரிகள் பலர் வரவேற்றுள்ளனர்.

கத்தார் – சவுதி எல்லைகள் திறப்பு: நுழைவு மற்றும் வெளியேறும் நடைமுறைகள் வெளியீடு.!

சவுதி அரேபியாவுக்குள் நுழைய விரும்பும் கத்தார் நாட்டவர்கள் COVID-19 PCR சான்றிதழைக் கொண்டுவர வேண்டும் என்றும் சவுதி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, Abu Samra எல்லையில் இருந்து வரும் அனைத்து வருகையாளர்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளது.

கத்தார், பஹ்ரைன் உறவுகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்; பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…