சவுதியில் காலாவதியான பணி விசா 3 மாதங்களுக்கு இலவசமாக நீட்டிப்பு.!

Pic: Arab news

சவுதி அரேபியாவில் காலாவதியான இகாமாவின் (பணி விசா) செல்லுப்படியை மூன்று மாதங்களுக்கு இலவசமாக நீட்டித்து சவுதி மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக ஏற்கனவே சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சவுதியை விட்டு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் வெளியறே முடியாமல் இருந்து வருகிறார்கள். இதனால், விசாக்கள் காலாவதியான நிலையில் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் அங்கேயே உள்ளனர்.

இந்நிலையில், சவுதியில் வெளிநாட்டினரின் இகாமா மற்றும் சுற்றுலா விசா ஆகியவை செல்லுபடியாகும் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.