சவுதி அரேபியா புனிதப் பயணிகளுக்கான விசா இடைநிறுத்தம்.!

Saudi Arabia suspends entry for Umrah pilgrimage over coronavirus fears.

ஆண்டின் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், சவுதி அரேபியா அரசாங்கம், மக்காவுக்கு புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 கிருமி பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், உம்ரா செய்வதற்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி யாத்திரிக்களுக்கும் மறறும் சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.