இந்தியா உட்பட 20 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை.!

Saudi Arabia suspends entry
Pic: Shutterstock

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இந்த உத்தரவிலிருந்து அரசுத் தரப்பில் அலுவல்ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்ற தோஹா.!

சவுதி அரேபியா அரசு விதித்துள்ள இந்த தற்காலிக தடை உத்தரவு இன்று (03-02-2021) முதல் அமலுக்கு வருகிறது.

தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள 20 நாடுகளின் பட்டியல்:

  1. இந்தியா
  2. பாகிஸ்தான்
  3. ஐக்கிய அரபு அமீரகம்
  4. எகிப்து
  5. லெபனான்
  6. துருக்கி
  7. அமெரிக்கா
  8. ஸ்வீடன்
  9. பிரேசில்
  10. பிரிட்டன்
  11. ஜெர்மனி
  12. பிரான்ஸ்
  13. ஸ்விட்சர்லாந்து
  14. அர்ஜென்டினா
  15. இத்தாலி
  16. அயர்லாந்து
  17. போர்ச்சுகல்
  18. தென் ஆப்பிரிக்கா
  19. இந்தோனேசியா
  20. ஜப்பான்

கத்தாரில் உள்ள பிரபல மருந்தகத்தின் புதிய கிளை திறப்பு.!