ஹஜ் புனிதப் பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை; சவுதி அரேபியா அரசு அறிவிப்பு.!

Muslims pray during the Laylat al-Qadr, or Night of Power, the holiest night for Muslims, while practicing social distancing, following the outbreak of the coronavirus disease (COVID-19), during the fasting month of Ramadan, at the Grand Mosque in Mecca, Saudi Arabia May 19, 2020. Saudi Press Agency/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS PICTURE WAS PROVIDED BY A THIRD PARTY. TPX IMAGES OF THE DAY

உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவிற்கு ஹஜ் என்னும் புனித பயணம் மேற்கொள்வது வழமையாக நடக்கும் நிகழ்வாகும். தற்பொழுது இருக்கும் கொரோனாவின் பாதிப்பையொட்டி சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவிற்கு வருவது சந்தேகமாக இருந்த நிலையில், சவுதி அரசாங்கம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும்
உம்ராவிற்கான அமைச்சகம் வெளியிட்ட
அறிவிப்பில், இந்த வருடம் ஹஜ்
மேற்கொள்வதற்கு அந்நாட்டில் இருக்கும்
குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்
மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று
தெரிவித்துள்ளது‌‌.

இதுக்குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,
கூட்டமான இடங்கள் மற்றும் மக்கள்
பெரிதளவு ஒன்று கூடும் இடங்களில்
கொரோனா வைரஸ் பரவும் அபாயம்
இருப்பதால் இந்த வருடத்திற்கான ஹஜ்
மேற்கொள்ள மிக குறைந்த
எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள் என்று
தெரிவித்துள்ளது. மேலும், தற்பொழுது சவுதி அரேபியாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கே ஹஜ் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கான அனைத்து தடுப்பு
நடவடிக்கைகளும் தேவையான சமூக
இடைவெளி, பொதுமக்களின் உடல்
ஆரோக்கியம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, ஹஜ் பாதுகாப்பான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கு ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் ஹஜ் மேற்கொள்வார்கள் என்று கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஹஜ் மேற்கோண்டவர்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej tamil