கத்தாரில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்பு; பலத்த காற்று வீசக்கூடும்.!

Pic: File Photo/The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) அதன் முன்னறிவிப்பில், இன்று (22-07-2020) பகல் நேரங்களில், சில மேகங்கங்ளுடன் கூடிய தெளிவற்ற மற்றும் சூடான வானிலை நிலவும் என்று கூறியுள்ளது.

மேலும், மேற்குப் பகுதிகளில் பிற்பகலில், பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், பலத்த காற்றுடன் தூசி அதிகரிக்கும் மற்றும் மோசமான தெரிவுநிலையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

கத்தாரில் இன்று குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறை 30 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.