கத்தாரில் சில பகுதிகளில் இன்று பரவலாக மழை.!

Pic: Qatar Living

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று (22-07-2020) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

துகான் (Dukhan) பகுதியில், இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், வாகன‌ ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வுத்துறை ட்வீட் செய்துள்ளது. ‌

இந்த காலநிலையின் போது, கத்தாரில் வசிக்கும் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று QMD கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்விட்டரில், கத்தார் தெற்கே உள்ள அபு சாம்ராவில் (Abu Samra) மழை பெய்யும் காணொளியை வெளியிட்டது.