கத்தாரில், கல்வி முறையின் முன்னேற்றத்தை மதிப்பிடு செய்ய அமைச்சர் பள்ளிகளுக்கு வருகை.!

The Minister of Education and Higher Education, H E Dr. Mohammed bin Abdulwahed Al Hammadi, during a visit to Rabaa Al Adawiya Secondary Girls School to assess educational process. Image Source : TPQ

கத்தாரில், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் H E Dr. Mohammed bin Abdulwahed Al Hammadi நேற்று (14-04-2020) Rabaa Al Adawiya பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான Ali bin Abi Talib Preparatory பள்ளி ஆகியவற்றிக்கு‌ வருகை புரிந்தார்.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர், பள்ளி நிர்வாகங்களையும், பள்ளிகளில் பணிபுரியும் குழுக்களையும் சந்தித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான தொலைதூரக் கல்வி முறையின் தேவைகள் உள்ளிட்ட கல்விச் செயல்பாட்டின் முன்னேற்றத்தை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் வருகையின் முடிவில், மாணவர்களுக்கு கல்வித் தரத்தை தேவையான தரத்துடன் வழங்குவதற்கும், மாணவர்களின் உற்சாகம், ஆர்வம் மற்றும் உந்துதல் ஆகியவற்றைப் பராமரிப்பதன் மூலம் கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் அறிவுறுத்தினார்.