கத்தாரில் வார இறுதியில் வானிலை தூசி காற்றுடன் மிகவும் சூடாக இருக்கும்; QMD

One death and 227 Covid-19 cases reported in Qatar on Sept 5
Pic: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், வானிலையானது பகல் நேரத்தில் சில மேகங்களுடன் மிகவும் சூடாக இருக்கும் என்றும், சில இடங்களில் தூசி காற்று வீசும் என்றும் கணித்துள்ளது.

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறை 35 டிகிரி செல்சியஸ் முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

இதையும் படிங்க: கத்தாரில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.!

கத்தாரில் நாளை (07-08-2020) காற்று வடமேற்கு திசையில் வடக்கே 10 கி.மீ முதல் 20 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், சில நேரங்களில் 28 கி‌.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த நாளில் வலுவான காற்று குறித்து வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், சனிக்கிழமையில் காற்று வடமேற்கு திசையில் 5 கி‌.மீ முதல் 15 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், மேலும் சில இடங்களில் 18 கிலோ மீட்டரை எட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar