கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பு..!

Sri Lanka Embassy in Qatar.

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று (11-04-2020) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், விடுமுறைக்காக அல்லது வேறு காரணங்களுக்காக கத்தாரிலிருந்து வெளியேறி, இலங்கை அல்லது பிற நாடுகளுக்குச் சென்று, தோஹாவுக்கு திரும்பி வர விரும்பும் இலங்கையர்கள், கத்தாரின் செல்லுபடியாகும் வதிவிட அனுமதியுடன் (Valid Residency Permit) பின்வரும் விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

  • குடும்ப பெயர்
  • வேறு பெயர்
  • QID எண்
  • தொலைபேசி எண்
  • பாஸ்போர்ட் எண்
  • தற்போது தங்கியுள்ள நாடு
  • கத்தாரில் வேலை செய்யும் இடம்
  • மின்னஞ்சல்

கத்தாருக்கு அவர்கள் திரும்புவதற்கு வசதியாக இலங்கை தூதரகம் கத்தார் அரசிடம் உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்க மேற்கண்ட விவரங்கள் தேவை என கேட்டுள்ளது.

மேலும், இந்த‌ விவரங்களை lankaembassyq80@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி, கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Source : Sri Lanka Embassy in Qatar