கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு.!

SriLanka Embassy special notice
Pic: Sri Lanka Embassy in Qatar

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று (28-05-2020) இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், விடுமுறைக்காக அல்லது வேறு காரணங்களுக்காக கத்தாரிலிருந்து வெளியேறி, இலங்கை அல்லது பிற நாடுகளுக்குச் சென்று, கத்தாருக்குள் திரும்பி வர விரும்பும் இலங்கையர்கள், கத்தாரின் செல்லுபடியாகும் வதிவிட அனுமதியுடன் (With Valid Residency Permit)  பின்வரும் விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • குடும்ப பெயர்
  • வேறு பெயர்கள்
  • QID எண்
  • பாஸ்போர்ட் எண்
  • தற்போது தங்கியுள்ள நாடு
  • கத்தாரில் வேலை செய்யும் இடம்
  • தொலைபேசி எண்
  • மின்னஞ்சல்

கத்தார் நாட்டிற்கு அவர்கள் மீண்டும்  திரும்புவதற்காக கத்தார் அரசிடம் உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கும் நோக்கில் இலங்கை தூதரகம் இந்த தகவல்களை சேகரிக்கிறது.

மேலும், இந்த‌ விவரங்களை lankaembassyq80@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

Source : Sri Lanka Embassy in Qatar