சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் தனது மூன்றாவது உதவி விமானத்தை அனுப்பி வைத்தது.!!

Third Qatari aid plane arrives in Khartoum
Pic: QNA

சூடான் நாட்டில் பெய்துவரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டுக்கு கத்தார் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இந்நிலையில், கத்தார் தொண்டு நிறுவனத்தின் “Peace for Sudan” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கத்தாரின் மூன்றாவது உதவி விமானம் சூடான் தலைநகர் கார்ட்டூம் (Khartoum) விமான நிலையத்திற்கு நேற்று (26-09-2020) வந்தடைந்தது.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் ஏர்வேஸ் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!!

Pic: QNA

இந்த உதவியை, சூடான் கத்தார் தூதர் HE Abdulrahman bin Ali Al Kubaisi, சூடானில் வெள்ளத்தை எதிர்ப்பதற்கான குழுவின் தலைவர், வெளியுறவு அமைச்சக தூதர் HE Muhyiddin Salem, மனிதாபிமான உதவி ஆணையத்தின் ஆணையர் ஜெனரல் Dr.Ahmed Al Bashir மற்றும் சூடானில் உள்ள கத்தார் தொண்டு அலுவலக இயக்குநர் Hussein Karmash ஆகியோர் பெற்றனர்.

மேலும், கத்தாரின் நான்காவது உதவி விமானம் இன்று (27-09-2020) ஞாயிற்றுக்கிழமை சூடான் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…