விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்த 50-க்கும் மேற்ப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு.!

Tourist visa holders

இந்தியாவில் இருந்து அமீரகம் வந்த 50-திற்க்கும் மேற்பட்ட சுற்றுலா விசா வைத்திருந்த இந்தியர்கள் விமான நிலையத்திலேயே சிக்கித் தவித்துள்ளனர். தற்பொழுது அவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

துபாய் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய சுற்றுலா விசா வைத்திருந்த பயணிகள் அமீரகத்தில் நுழைவதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் அவர்களுக்கு அமீரகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறு துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை பொருள்கள் பறிமுதல்; ஒருவர் கைது.!

அமீரகத்திற்கு வரும் பயணிகள் செல்லுபடியாகும் ஹோட்டல் முன்பதிவு அல்லது அமீரகத்தில் வசிக்கும் உறவினர் சிபாரிசு மற்றும் தனது நாடு திரும்புவதற்கான ரிட்டர்ன் டிக்கெட் பதிவு செய்திருக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் இமிகிரேஷன் விதிகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விதிகளுக்கு இணங்கும் பெரும்பாலான பயணிகள் அமீரகத்திற்குள் நுழைவதற்கு எந்தவித தாமத்தையும் விமான நிலையத்தில் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.