அமீரக தேசிய தினம்: 472 சிறை கைதிகளுக்கு விடுதலை அளித்த துபாய் ஆட்சியாளர்.!

UAE national Day
Pic: @NET_AD

அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, துபாயில் உள்ள சிறைகளில் உள்ள 472 சிறை கைதிகளை விடுதலை செய்ய அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான Sheikh Mohammad bin Rashid Al Maktoum அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த சிறை கைதிகளை விடுவிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமீரகத்தின் அரசு ஊடகம் (WAM) தெரிவித்துள்ளது.

சூடானின் முன்னாள் பிரதமர் மரணம்: கத்தார் அமீர் இரங்கல்.!

முன்னதாக இந்த வார தொடக்கத்தில், அபுதாபியில் உள்ள சிறைகளில் வாடும் 628 சிறை கைதிகளை விடுதலை செய்ய அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான Sheikh Khalifa bin Zayed Al Nahyan அவர்கள் உத்தரவிட்டார்.

மேலும், Ajman மற்றும் Umm Al-Quwain  ஆட்சியாளர்கள் சிறை கைதிகளை விடுதலை செய்வது குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

சவுதியில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி.!