கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் முன்னேற்றம்..!

ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீர் பயணமாக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.

அதன்படி, கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும், முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானில் இரண்டு நாள் சண்டை நிறுத்தத்தை கொண்டுவர இருதரப்புக்கும் இடையே ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை விறுவிறுப்பு அடைந்துள்ளதாகவும், ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் தலிபான் பிரதிநிதிகள் நெருங்கி வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.