கத்தாரில் அமெரிக்கா-தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.!

US, Taliban sign historic peace agreement.

மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள், அமெரிக்க படைகள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வர சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தலிபான்களுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில், அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று (29-02-2020) கையெழுத்தானது.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க சிறப்பு தூதர் சல்மே கலீல்சாத் (Zalmay Khalilzad) மற்றும் தலிபான் அரசியல் தலைவர் முல்லா அப்துல் கானி பரதர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.