கத்தாரில் இருந்து நான்காம் கட்டமாக இந்தியாவுக்கு 51 விமானங்கள்; இந்திய தூதரகம் பட்டியல் வெளியீடு.!

Pic: Twitter/Indigo

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 51 விமானங்களின் பட்டியலை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு
ஜூலை 7ஆம் தேதி முதல் லக்னோ, மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு விமானங்கள் செல்லவிருக்கின்றன. இந்தியா செல்லும் இந்த அனைத்து விமானங்களும் இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோவால் இயக்கப்பட உள்ளது.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு 193 விமானங்கள் என இணையதளத்தில் அறிவித்திருந்தது. பின்னர், இது 51 விமானங்களாக மாற்றப்பட்டுள்ளது.

நான்காம் கட்டத்தில் கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் மூன்று விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சென்றடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை கத்தார் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது:

Images Credits: India Embassy in Qatar