VBM 4ம் கட்டம்: கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று ஒரு விமானம் புறப்பட்டது.!

Pic: Tamilar peravai Qatar

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக  கத்தாரில் இருந்து இன்று (13-07-2020) தமிழகத்திற்கு ஒரு விமானம் புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 203 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தைகளுடன் இண்டிகோ (6E 8713) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 71வது விமானம் ஆகும்.

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 294 குழந்தைகள் மற்றும் 12,788 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.