கத்தாரில் சாகசத்தில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்..!

Vehicles seized for drifting after video shared online
Pic: Twitter/trafficqa

கத்தார் அல் கர்ராபா (Al Gharrafa) பகுதியில்‌ கார் ஒன்றை இரு சக்கரங்களினால்‌ ஒட்டி சாகசம் செய்த நபரின் வாகனத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவர், இரண்டு சக்கரங்களால் காரை ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரின் புதிய தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இந்திய தூதரகம் வரவேற்பு.!

வாகன சாகசத்தில் ஈடுபட்ட அந்த நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது போக்குவரத்து துறை ட்வீட்டில் கூறியுள்ளது.

மேலும் இதேபோல், அல் மஜ்த் (Al Majd) சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட பல வாகனங்களையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், இந்த வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாகசத்தில் காணப்பட்ட மீதமுள்ள வாகனங்களை பறிமுதல் செய்யும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகள் மீண்டும் திறப்பு..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  Facebook

 Twitter

 Instagram