கத்தாரில், Metrash2 அப்ளிகேஷன் மூலம் அனைத்து முன் நுழைவு அனுமதிகளையும் நீட்டிக்காலம்.!

Pic: iloveqatar.net

கத்தாரில் உள்ள அனைத்து முன் நுழைவு அனுமதிகளையும் (விசாக்கள்) இப்போது Metrash2 அப்ளிகேஷன் மூலம் நீட்டிக்க முடியும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசா காலாவதியாகும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அனுமதிகளை நீட்டிக்க முடியும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

“சேவை மையங்களுக்கு செல்லாமல்
Metrash2 அப்ளிகேஷன் மூலம் காலாவதியாகும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அனைத்து முன் நுழைவு அனுமதிகளையும் (விசாக்கள்) நீட்டிக்க முடியும்” என்று கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) ட்வீட்டில் தெரிவித்துள்ளது.