சாலைகளில் வாகனங்கள் வலது புறமாக முந்துவது போக்குவரத்து விதிமீறல் – கத்தார் உள்துறை அமைச்சகம்

Pic: GETTY

சாலைகளில் வாகனங்கள் வலது புறமாக முந்தி செல்வதற்கு எதிராக கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள
பதிவில், சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது வலது புறமாக முந்துவது போக்குவரத்து விதிமீறல் மற்றும் பிற சாலை பயனர்களின் உரிமைகளுக்கு அவமரியாதை என்றும் மேலும், உங்கள் பாதுகாப்பிற்காக தயவுசெய்து வலது பக்கம் முந்தி செல்வதைக் தவிர்க்கவும் என்றும் கூறியுள்ளது.

Image Credits: MOI