கொரோனாவிலிருந்து கத்தார், சவுதி எப்போது மீளும்.? – ஆய்வில் தகவல்.!

கொரோனா தாக்கத்திலிருந்து சவுதி அரேபியா, கத்தார் எப்போது விடுபடும் என சிங்கப்பூர் பல்கலைகழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் நகர்வுகளின் சுழற்சியை மையமாக கொண்டு தரவு சார்ந்த மதிப்பீடுகளை பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அவ்வாறு ஆய்வு செய்ததில் செப்டம்பர் 10ஆம் தேதி சவுதி அரேபியாவிலும், செப்டம்பர் 14ஆம் தேதி கத்தாரில் கொரோனா முடிவுக்கு வரும் என தெரிவிக்கிறது. இந்த ஆய்வு மே 7ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் பரவலின் தரவுகளின் படி, எஸ்.ஐ.ஆர் மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு துறையால் எஸ்.ஐ.ஆர் என்ற இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

3 வித சமன்பாடு

1.தொற்று நோயால் பாதிக்கப்படக்கூடியவர்கள் எண்ணிக்கை(எஸ்)

2.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை(ஐ)

3.தொற்றுநோயால் மீட்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்கள்(ஆர்)

இவ்வாறு கொரோனா பரவல் குறித்து விவரிக்க எஸ்.ஐ.ஆர் மாதிரி ஆய்வு 3 விதமான சமன்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர் மாதிரி பீட்டா மற்றும் காமா ஆகிய இரண்டு முக்கிய அளவுருக்களை உள்ளடக்கியது. காமா என்பது பாதிக்கப்பட்டவருக்கு தொற்றாக இருக்கும் நாட்கள் மற்றும் வைரஸின் ஆயுளை குறிக்கிறது.

பீட்டா என்பது முன்னர் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சராசரி எண்ணிக்கையாகும், மேலும் இது ஒரு சமூகத்தில் உள்ளவர்களின் தொடர்பு முறைகளுடன் மட்டுமல்லாமல் வைரஸின் தொற்று செயல்முறை பண்புகளுடனும் தொடர்புடையது. இந்த அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அரசின் கொள்கைகள், சோதனை நெறிமுறைகள் மற்றும் மனித நடத்தைகள் போன்ற நிஜ உலக முன்னேற்றத்தை பொறுத்து கணிப்புகள் நிச்சயமற்றவை மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்று அந்த ஆய்வு வலியுறுத்தி உள்ளது.

Source: தமிழக ஊடகங்கள்