கத்தாரில் இந்த வார இறுதியில் குளிர்ந்த வானிலை நிலவும்; வானிலை ஆய்வுத்துறை.!

Winter cold spell
Pic: Qatar Weather

கத்தாரில் இந்த வார இறுதியில் குளிர்ந்த வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும், மேலும் இது நாட்டின் சில தெற்கு பகுதிகளில் மேலும் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், கத்தாரில் வரும் நாட்களில் குளிர்ந்த பகல் மற்றும் இரவு நேரங்களாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தார், எகிப்து இடையே நேரடி‌ விமானங்களை இயக்க முடிவு.!

கத்தாரில் வார இறுதியில் குளிர்ச்சியின் தாக்கம் இருக்கும் என்றும், வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி நேற்றிரவு முதல் வார இறுதியில் தொடங்கும் என்றும், நாட்டின் சில தெற்கு மற்றும் தொலைதூர பகுதிகளில் மிகக் குறைந்த வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்கும் என்றும் கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.

மேலும், கத்தாரில் இந்த வார இறுதியில் அதிக வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…