கத்தாரின் இந்த பகுதியில் புதிய பெட்ரோல் நிலையம் திறப்பு.!

Woqod new petrol station
Pic: WOQOD

கத்தார் எரிபொருள் நிறுவனமான WOQOD புதிதாக தனது 109வது பெட்ரோல் நிலையத்தை Al Mearad -3  பகுதியில் திறந்துள்ளது.

இதுகுறித்து, WOQOD நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான Saad Rashid Al Muhannadi அவர்கள் கூறுகையில், பெட்ரோலிய பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்கும் இலக்கை அடைவதற்கும் WOQOD நாட்டில் தனது பெட்ரோல் நிலைய வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்த விரும்புகிறது என்றார்.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 5 பேர் கைது‌.!

இந்த புதிய பெட்ரோல் நிலையமானது சுமார் 15,400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது Al Mearad பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறத்திற்கு சேவை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் நிலையம் மூலம் கீழ்க்கண்ட சேவைகளைப் பெறலாம்:

  • 24 மணி நேரமும் சேவை.
  • Sidra கடை சேவை.
  • Manual கார் சுத்திகரிப்பு சேவை.
  • ஆயில் மாற்றுதல் மற்றும் வாகன டயர் பழுதுபார்த்தல்.
  • LPG சிலிண்டர்கள் (SHAFAF) விற்பனை.
  • இலகுரக வாகனங்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் விற்பனை.

கத்தாரில் உள்ள பிரபல சஃபாரி மால் மீண்டும் திறப்பு.!