கத்தார் WOQOD தனது 106வது‌‌ பெட்ரோல் நிலையத்தை திறந்துள்ளது.!

Woqod opens Al Wajba-3 petrol station
Pic: WOQOD

கத்தாரில் WOQOD வலையமைப்பு தனது 106வது பெட்ரோல் நிலையத்தை Al Wajba-3 பகுதியில் திறந்துள்ளது.

இதுகுறித்து, WOQOD நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான Saad Rashid Al Muhannadi அவர்கள் கூறுகையில், Al Wajba-3 பகுதியில் புதிய பெட்ரோல் நிலையத்தை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெட்ரோலிய பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்கும் இலக்கை அடைவதற்கும் WOQOD நாட்டில் தனது பெட்ரோல் நிலைய வலையமைப்பை விரிவுபடுத்த விரும்புகிறது என்றார்.

இந்த பெட்ரோல் நிலையமானது, 15,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது என்றும், இது Al Wajba-3 பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறத்திற்கு சேவை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பெட்ரோல் நிலையம் மூலம் கீழ்க்கண்ட சேவைகளைப் பெறலாம்:

  • 24 மணி நேரமும் சேவை.
  • Sidra கடை சேவை.
  • Manual கார் சுத்திகரிப்பு சேவை.
  • ஆயில் மாற்றுதல் மற்றும் வாகன டயர் பழுதுபார்த்தல்.
  • LPG சிலிண்டர்கள் (SHAFAF) விற்பனை
  •  இலகுரக வாகனங்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் விற்பனை.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…