கத்தாரில் உள்ள இந்த இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.!   

temporarily close petrol station
Pic: Qatar Living

கத்தாரின் தொழில்துறை பகுதி மற்றும் நியூ ராயன் New Rayan பகுதியிலுள்ள WOQOD பெட்ரோல் நிலையங்கள் தனது சேவைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக WOQOD அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் எரிபொருள் நிறுவனம் ட்விட்டரில், தொழில்துறை பகுதி மற்றும் நியூ ராயன் New Rayan பகுதியிலுள்ள WOQOD பெட்ரோல் நிலையங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

கத்தார் பெட்ரோலியம் டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

இருப்பினும், இரு பெட்ரோல் நிலையங்களில் உள்ள சித்ரா சேவைகள் இயங்கும் என்றும், தொழில்துறை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வாகன பராமரிப்பு சேவைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிரமத்திற்கு WOQOD வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், நியூ ராயன் பகுதியில் உள்ளவர்கள் அருகிலுள்ள Rayan மற்றும் Wajba-3 பெட்ரோல் நிலையங்களை பயன்படுத்துமாறும், தொழில்துறை பகுதியில் உள்ளவர்கள் Um Saneem மற்றும் புதிய தொழில்துறை பகுதி பெட்ரோல் நிலையங்களை பயன்படுத்துமாறும் WOQOD கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் தொலைகாட்சியின் பிரபல ஒளிபரப்பாளர் காலமானார்.!

Pic: WOQOD
Pic: WOQOD

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…