தொழிலாளர் தங்குமிடங்களில் ஆய்வு பிரச்சாரம் தொடக்கம்.!

worker accommodations
Pic: MME

கத்தாரின் அல் ரய்யான் நகராட்சி தொழிலாளர்கள் பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான தங்கும் வசதிகளை உறுதி செய்யும் வகையில், குடும்ப குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொழிலாளர் முகாம்கள், பகிர்வு செய்யப்பட்ட வில்லாக்கள் மற்றும் குடியிருப்பு பிரிவுகள் ஆகியவற்றில் ஆய்வு பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது.

அல் ரய்யான் நகராட்சியின் Umm Saneem பகுதியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் கீழ், நகராட்சி ஆய்வாளர்கள் தவறான தொழிலாளர் முகாம்கள் மற்றும் பகிர்வு செய்யப்பட்ட குடியிருப்பு பிரிவுகளுக்கு 92 எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

கத்தார் தேசிய தினம்: புதிய கத்தார் ரியால் நோட்டுகளை வெளியிட்டது மத்திய வங்கி.!

இது தொடர்பாக, அல் ரய்யான் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடும்ப குடியிருப்பு பகுதிகளுக்குள் ஒரு இடத்தில் ஐந்து தொழிலாளர்களுக்கு மேல் வசிப்பது சட்ட விதிகளை மீறுவதாக கருதப்படுகிறது என்றும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தை மீறுபவருக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை மற்றும் QR 50 ஆயிரம் முதல் QR 100,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்தார் தேசிய தினம்: இந்த அருங்காட்சியகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…