கத்தார் அரசு சேவை வளாகத்தின் வேலை நேரம் மாற்றம்..!

கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (The Ministry of Administrative Development, Labour and Social Affairs) பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாளை முதல் (23-03-2020) மேலதிக அறிவிப்பு வரும் வரை, அரசு சேவை வளாகத்தின் வேலை நேரத்தை மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், புதிய நேரங்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை என்று கத்தார்
நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் இன்று டுவீட்டர் பதிவில் கூறியுள்ளது.