கத்தாரில் நாளை முதல் வணிக  நடவடிக்கைகளுக்கான வேலை நேரம் அறிவிப்பு.!

Image Credits : The Peninsula Qatar

கத்தாரில் வணிக மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கான (commercial and service activities) வேலை நேரம் நாளை (மே 31) முதல் காலை 7 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை இருக்கும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MOCI) சுற்றறிக்கையில்  தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முடிவிலிருந்து கீழ்க்கண்டவற்றிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது‌.

உணவுப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மானிய பொருட்கள் (ஹைப்பர் மார்க்கெட்டுகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகை பொருட்கள்) பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் கடைகள், பராமரிப்பு நிறுவனங்கள் (மின்சாரம், பிளம்பிங் மற்றும் மின்னணு சேவைகள்) ஆன்லைனில் மூலம் ஆர்டர்களை வழங்கும் நிறுவனங்கள், பெட்ரோலிய நிலையங்கள் மற்றும் கார் சேவைகள், ஏஜென்சிகளுடன் இணைந்த கார் பராமரிப்பு பட்டறைகள் (workshop),
மருந்தகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுங்க சேவைகளில் இயங்கும் லாஜிஸ்டிக்ஸ் சேவை நிறுவனங்கள் மற்றும் சரக்கு நிறுவனங்கள், விருந்தோம்பல் துறையில் செயல்படும் நிறுவனங்கள் (Companies operating in the hospitality), தொழிற்சாலைகள் மற்றும் பேக்கரிகள்.

உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் காபி கடைகள் ஆகியவைகளுக்கு வணிக இடத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை வழங்கவோ அல்லது ஒப்படைக்கவோ அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், மால்களில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் காபி கடைகள் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. மேலும், அவை விநியோக ஆர்டர்களைச் செயல்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த விற்பனை நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆர்டர்களை ஒப்படைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடைகள் மற்றும் அலுவலகங்களில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், முன்னர் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மால்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் அமைந்துள்ள உணவு பொருட்கள் மற்றும் மருந்தகங்களை விற்கும் விற்பனை நிலையங்களைத் தவிர, சில்லறை விற்பனை நிலையங்களை மூடுவதற்கான முடிவு செல்லுபடியாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முடிவுகளுக்கு அனைத்து நிறுவனங்களும், சில்லறை விற்பனை நிலையங்களும் இணங்க வேண்டும். இந்த முடிவு விதிகளின் எந்தவொரு மீறலும் குற்றவாளிகளை சட்ட பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: The Peninsula Qatar