கத்தாரில் கோடைக்கால வேலை நேரங்களை மீறியதற்காக 56 நிறுவனங்களின் வேலைத்தளங்கள் மூடல்.!

கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் கோடைகாலத்தில் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான சிறப்பு வேலை நேரம் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றும், காலை 11:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

இந்த முடிவின் விதிமுறைகளை மீறியதற்காக 56 நிறுவனங்களின் வேலைத்தளங்களை 3 நாட்களுக்கு மூடியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 15 முதல் 18 வரை விரிவான ஆய்வு பிரச்சாரங்களை நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும், இதுபோன்ற விதிமீறல்களை புகாரளிக்க 40280660 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.