கத்தாரில் சாலைகளின் தரத்தை அறிய புதிய தொழில்நுட்பம்.!

New inspection cars to monitor Ashghal road works.

கத்தாரில் சாலை வேலைகளை கண்காணிக்கும் ஒரு அங்கமாக கத்தார் பொது வேலைகள் அதிகார சபை (Ashghal) புதிய வகை தொழில் நுட்பத்துடன் கூடிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் சாலைகளின் தன்மை மற்றும் தரம் போன்ற அனைத்து வகையான அம்சங்களும் பரிசோதனை செய்யப்படுகின்றன. சாலைகளை சரியான நேரத்தில் பழுதுபார்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.

மேலும், சாலைகளில் குறைபாடுகளையும் கண்டுபிடிப்பதற்கு கேமராக்கள், ராடார் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை இதில் பொருத்தப்பட்டு உள்ளனர். இது போன்ற சோதனை மூலம், சாலையின் சிறந்த தரம், ASPHALT (தார்) தரம் மற்றும் நுண்ணிய குறைபாடுகள் போன்றவைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் விவரங்களை, செயல்பாடு மற்றும் பராமரிப்பைச் சேர்ந்த
முகம்மது அல் கஷாபி அவர்கள் ஒரு வீடியோவில் விளக்கியுள்ளார்.