கத்தாரில் வருகின்ற வெள்ளி முதல் புதிய சீசன் தொடக்கம்.!

Al Wasmi season set to begin in Qatar on Friday
Pic: Qatar Weather

கத்தார் நாட்டில் வருகின்ற அக்டோபர் 16ம் தேதி முதல் Al Wasmi சீசன் தொடங்க உள்ளதாக கத்தார் வானிலை ஆய்வுதுறை (QMD) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சீசன் 52 நாட்கள் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த சீசனில், பருவமழை பெய்தால் ஜெரனியம் (Geranium) போன்ற உள்ளூர் தாவரங்கள் வளர உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தி பேர்ல் கத்தாரில் புதிய வடிவிலான பேருந்து நிறுத்தங்கள் திறப்பு.!

இந்த பருவத்தில், மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்கே நகரும் என்றும், நல்ல மழை பொழிவின் அறிகுறி காணப்படுகிறது என்றும் QMD தெரிவித்துள்ளது.

இந்த பருவநிலை காரணமாக, தோஹாவில் வெப்பநிலை படிப்படியாக 35 டிகிரி செல்ஸியஸ் வரை குறையும் என்றும்,

பகல் நேரத்தில் லேசான வெப்பநிலையும், இரவு நேரத்தில் குளிர்ந்த வெப்பநிலை நிலவும் என QMD குறிப்பிட்டுள்ளது.

இந்த வானிலை மாற்றத்தால், சாதாரணமாக ஏற்படும் காய்ச்சல் மற்றும் பிற பருவக்கால நோய்கள் குறித்து கத்தார் வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பொதுமக்கள் காய்ச்சல் தடுப்பூசிகளை எடுத்து கொள்ளவும், தவறாமல் கைகளை கழுவுமாறும், நோய்வாய்பட்டவர்களிடமிருந்து நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாக QMD தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் Mesaimeer Interchange-ல் புதிய பாதை திறப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…