கத்தார் அமீர் இன்று சவுதி செல்கிறார் – வளைகுடா உச்சி மாநாட்டில் பங்கேற்பு.!

Amir attend GCC Summit
Pic: Qatar Day

சவுதி அரேபியாவில் இன்று (05-01-2021) நடைபெறும் 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் பங்கேற்க கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.

கத்தார் மாநில தூதுக்குழுவிற்கு அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் தலைமை தாங்குவார் என அமிரி திவான் நேற்று அறிவித்துள்ளது.

கத்தார், சவுதி அரேபியா எல்லைகள் மூன்று ஆண்டுகளுக்கு பின் திறப்பு.!

வளைகுடா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தையடுத்து,
கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகள் நேற்று (04-01-2021) இரவு திறக்கப்படும் என குவைத் வெளியுறவு அமைச்சர் முன்னதாக அறிவித்தார்.

சவுதி அரேபியாவில் இன்று நடைபெறும் 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில்  இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிக விபரங்கள் அறிவிக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் கார்வா பேருந்துகளில் கட்டண வசூல் மீண்டும் தொடக்கம்.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…