கத்தாரில் கார்வா (Karwa) பேருந்துகள் ஜனவரி 10 முதல் மீண்டும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என அறிவித்துள்ளது.
ஜனவரி 10 முதல் எங்கள் சேவைகளுக்கு வழக்கம் போல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என பொது பேருந்து போக்குவரத்து வழங்குநர் கார்வா பேருந்து அப்ளிக்கேஷன் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting விழா தொடக்கம்.!
Rechargeable Karwa Smart கார்டை வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் கார்வா ஸ்மார்ட் கார்டுகள் 24 மணிநேர வரையறுக்கப்பட்ட மற்றும் வரம்பற்றவை என்றும், வணிகர்கள் அல்லது பஸ் டிரைவர்கள் மூலம் இனி விற்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்வா பஸ் ஆப் மூலம் 24 மணிநேர வரம்பற்ற QR Code டிக்கெட்டை நீங்கள் வாங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கத்தாரில் கடந்த செப்டம்பர் மாதம் பொது போக்குவரத்து அமைப்பில் COVID-19 கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் 4ம் கட்டத்தின் ஒரு பகுதியாக 30 சதவீத திறன் கொண்ட பொது பஸ் சேவையை மறுதொடக்கம் செய்தபின் கார்வா பயணிகளுக்கு இலவச சேவைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் இந்த பகுதியில் புதிய பெட்ரோல் நிலையம் திறப்பு.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…