மறைந்த குவைத் அமீரின் இறுதி சடங்கில் பங்கேற்றார் கத்தார் அமீர்.!

Amir participates in funeral prayer of Sheikh Sabah Al-Ahmad
Pic: QNA/Gulf-Times

குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (29-09-2020) காலமானார்.

குவைத் அமீர் உயிரிழந்ததை தொடர்ந்து, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மிகுந்த சோகத்துடன் தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இந்நிலையில், மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் இறுதி பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் குவைத் நாட்டிற்கு நேற்று (30-09-2020) பயணம் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: குவைத் அமீர் மறைவு: கத்தாரில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.!

குவைத் விமான நிலையத்திற்கு வந்த அமீரை, குவைத் அமிரி திவானின் ஆலோசகர் ஷேக் முகமது அல் காலித் ஹமாத் அல் சபா, குவைத்தின் கத்தார் தூதர் HE Bandar bin Mohammed Al Attiyah மற்றும் கத்தார் தூதரக ஊழியர்கள் வரவேற்றனர்.

கத்தார் அமீரின் தனிப்பட்ட பிரதிநிதி HH Sheikh Jassim bin Hamad Al-Thani மற்றும் ஷேக்குகள், அமைச்சர்கள் ஆகியோரும் அமீருடன் குவைத் நாட்டிற்கு சென்றனர்.

குவைத் நாட்டில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் இறுதி பிரார்த்தனையில் பங்கேற்ற பின், அமீர் நாடு திரும்பினார்.

இதையும் படிங்க: கத்தார் பெட்ரோலியம் அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…