கத்தார் பெட்ரோலியம் அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

Qatar Fuel Prices January
Poc: WOQOD

கத்தார் பெட்ரோலியம் அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (30-09-2020) அறிவித்துள்ளது. கத்தார் பெட்ரோலியம் அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல் விலையை சற்று அதிகரித்துள்ளதுடன் டீசல் விலையை குறைத்துள்ளது.

புதிய விலைப்பட்டியலின் படி, அக்டோபர் 01 முதல் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு QR 1.25 ரியால்களாக விற்பனையாகும். இது செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 5 திர்ஹம்கள் அதிகமாகும். மேலும், சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.30 ரியால்களுக்கு விற்பனையாகும்‌. இது செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 5 திர்ஹம்கள் அதிகமாகும்.

இதையும் படிங்க: COVID-19: கத்தாரில் இன்று ‌(செப் 30) புதிதாக 227 பேர் பாதிப்பு.!

மேலும், ஒரு லிட்டர் டீசல் QR 1.15 ரியால்களுக்கு விற்பனையாகும். இது செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 10 திர்ஹம்கள் குறைவாகும்.

கத்தார் பெட்ரோலியம் செப்டம்பர் மாததில் எரிபொருள் விலைகளில் எந்தவித மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…