கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (27-01-2021) காலை Al Udeid விமான தளத்தில் உள்ள கத்தார் அமிரி விமானப்படையின் மருத்துவ மையத்திற்கு சென்று அங்குள்ள பல்வேறு விமானப்படைகள் மற்றும் குழுவினருக்கு வழங்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார சேவைகளைப் பார்வையிட்டார்.
அமிரி விமானப்படை மருத்துவ மையத்தின் மருந்தகம், சுகாதார சேவைகள், உடற்பயிற்சி பரிசோதனைகள், சிகிச்சைகள், flight simulators, சிறப்பு கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சி முறைகளையும் கத்தார் அமீர் பார்வையிட்டார்.
கத்தாரில் வண்ணமயமான மலர் திருவிழா துவக்கம்.!
கத்தார் அமீர் அவர்களுடன் பிரதமரும், உள்துறை அமைச்சருமான H E ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.