இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் விரைவில் திறக்கப்படும் – MoI மூத்த அதிகாரி.!

Qatar Visa Center Colombo
Pic: File/The Peninsula

வெளிநாடுகளில் உள்ள கத்தார் விசா மையங்களை மீண்டும் திறப்பதன் ஒரு பகுதியாக, இலங்கையில் உள்ள கொழும்பு விசா மையம் விரைவில் செயல்படும் என உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள கத்தார் விசா மையங்களை மீண்டும் திறந்துள்ளோம், தொழிலாளர் இயக்கத்தை எளிதாக்க கொழும்பில் உள்ள விசா மையம் விரைவில் மீண்டும் திறக்கப்படும்‌ என பாஸ்போர்ட் பொது இயக்குநரகத்தின் விசா ஆதரவு சேவைகள் துறையின் உதவி இயக்குநர் Captain Nasser Al Khalaf கூறியுள்ளார்.

கத்தார் அமீர் இன்று சவுதி செல்கிறார் – வளைகுடா உச்சி மாநாட்டில் பங்கேற்பு.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில நாடுகளில் புதிய நடைமுறைகளினால் சில மையங்களை மீண்டும் திறப்பதில் தாமதமாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் அல்லது அரை அரசு நிறுவனங்களுக்கு (semi-governmental) பணி விசாக்கள் வழங்கப்படுகின்றன என்றும், குடும்ப வருகைகள் (Family Visits), சுற்றுலா விசாக்கள் மற்றும் நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்பதற்கான விசாக்களும் வழங்கப்படுகிறது என Nasser Al Khalaf தெரிவித்துள்ளார்.

கத்தார் உள்துறை அமைச்சகம், நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம், பொது சுகாதார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

கத்தாரில் EHTERAZ பயன்பாட்டைக் கூறி வரும் போலி அழைப்புகள்; MOPH எச்சரிக்கை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…