COVID-19: கத்தாரில் இன்று (அக்.28) ‌புதிதாக 250 பேர் பாதிப்பு.!

Corona update Qatar Feb18
Photo: iloveqatar.net

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 250 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 267 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (28-10-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,31,939ஆக உள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 267 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,884ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணிநேரத்தில் 10,044 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 9,60,075 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமிரி திவானின் முதல்வரை நியமனம் செய்தார் கத்தார் அமீர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…