கத்தார் துணை பிரதமர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.!

Deputy PM meets IndianMinister
Pic: QNA

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் (27-12-2020) கத்தார் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், கத்தார் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான HE ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அவர்களைச் நேற்று (28-12-2020) சந்தித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கத்தார் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார்.!

இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள் குறிப்பாக பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும், இந்த சந்திப்பில், நாட்டிற்கு இந்திய உழைப்பின் பங்களிப்புகள் குறித்தும் மற்றும் பொதுவான நலன்களின் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் நேற்று காலை கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களைச் சந்தித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எழுத்துப்பூர்வ செய்தியை வழங்கினார்.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 5 பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…