கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா: பணியிடங்களில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வெளியீடு.!

HMC lists precautionary measures
Pic: The Peninsula

கத்தாரில் கடந்த சில நாட்களாக COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த வாரம் 80 சதவீத ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் பணியாற்றலாம் என்றும், மீதமுள்ள 20 சதவீத ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றலாம் என்றும் கடந்த வாரம் கத்தார் அமைச்சரவை உத்தரவிட்டது.

இதனையடுத்து, அந்தந்த பணியிடங்களில் இருப்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மற்றும் COVID-19 பரவாமல் தடுப்பதற்கும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை ஹமாத் மருத்துவ நிறுவனம் (HMC) வலியுறுத்தியுள்ளது.

கத்தாரில் கொரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.!

ஹமாத் மருத்துவ நிறுவனம் பட்டியலிட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் : 

  • உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் 1.5 மீட்டர் சமூக இடைவெளி கடைபிடிக்கவும்.
  • எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் பயன்படுத்தியதற்கு பிறகு பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • மற்றவர்களை வாழ்த்தும் போது கைக்குலுக்குவதை தவிர்க்கவும் மற்றும் மண்டபங்களில் கூட்டங்களைத் தவிர்க்கவும்.
  • பணியிடங்களில் நுழையும்போது கை சுத்திகரிப்பு (hand sanitizers) மற்றும் கையுறைகள் பயன்படுத்தவும்.
  • இருமல் அல்லது தும்மும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை ஒரு துணியில் மூடிக்கொள்ளவும்.
  • அதிகாரபூர்வ அதிகாரிகளின் வழிமுறைகளைப் படித்து பின்பற்ற வேண்டும்.
  • உங்கள் வெப்பநிலையை சரிபார்த்து உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தை அணுகவும்.
  • பணியிடங்களில் நுழையும் போது உங்கள் EHTERAZ செயலியை பயன்படுத்த வேண்டும்.
  • சுவாச நோயின் அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ உதவியை அணுகவும்.

கத்தார் தேசிய விளையாட்டு தினம்: விடுமுறையை அறிவித்தது அமிரி திவான்.!