கத்தார் தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இந்திய வெளியுறவு அமைச்சர் அழைப்பு.!

Indian FM Invites Businessmans
Pic : QNA

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு நாள் பயணமாக நேற்று (27-12-2020) கத்தார் நாட்டிற்கு வருகை தந்தார்.

தோஹாவில் உள்ள Sheraton ஹோட்டலில் நேற்று (27-12-2020) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கத்தார் சேம்பர் (QC) தலைவர் ஷேக் கலீஃபா பின் ஜாசிம் அல் தானி, கத்தார் வர்த்தக சங்கத்தின் (QBA) தலைவர் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி, கத்தார் மற்றும் இந்திய வர்த்தகர்கள், கத்தார் இந்திய தூதர் Dr.தீபக் மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கத்தார் ஹமாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக பரவும் வதந்தி; HIA மறுப்பு.!

இந்த சந்திப்பின் போது, கத்தார் தனியார் துறை மற்றும் இந்திய பிரதிநிதிக்கும் இடையிலான உறவுகளை மறுஆய்வு செய்வது, இரு தரப்பிலும் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண்பது குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பில், கத்தார் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதார துறைகளில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கத்தாரில் வசிக்கும் 5 வயது இந்திய சிறுவனின் புதிய உலக சாதனை.!

ஹமாத் துறைமுகத்துடன் நேரடி கடல் பாதையை ஆரம்பித்த நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றும் கொரோனா தொற்றின் காலகட்டத்திலும் இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகம் 10.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும் கத்தார் சேம்பரின் (QC) தலைவர் ஷேக் கலீஃபா பின் ஜாசிம் அல் தானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் வசிக்கும் இந்திய மக்களை COVID-19 தொற்றின் போது கவனித்து கொண்டதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் HE Dr.ஜெய்சங்கர் அவர்கள் கத்தார் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…