கத்தாரில் ATM-ல் பணம் எடுக்க கட்டுப்பாடு என்ற தகவல் போலியானது; மத்திய வங்கி.!

limiting ATM withdrawal incorrect
Pic: The Peninsula Qatar

கத்தாரில் ATM மூலம் குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் எடுக்க முடியும் என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என கத்தார் மத்திய வங்கி (QCB) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ATM மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக QR 5,000 மட்டுமே எடுக்க முடியும், கத்தார் மத்திய வங்கியிலிருந்து அறிவிப்பு வந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பொய்யானது என கத்தார் மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.

கத்தாரில் நாளை மறுநாள் கட்டாரா பாரம்பரிய தோவ் விழா; ஏற்பாடுகள் தீவிரம்.!

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது கத்தார் மத்திய வங்கியால் வெளியிடப்படாத போலி சுற்றறிக்கை என்றும், இந்த செய்தி வதந்தியைத் தவிர வேறில்லை என்றும் அரபு ஊடகங்கள் கத்தார் மத்திய வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெற வேண்டும் என்ற அவசியத்தை QCB வலியுறுத்தியுள்ளது.

மேலும், அறியப்படாத தரப்பினரால் வெளியிடப்பட்ட செய்திகளையும், சுற்றறிக்கைகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

வதந்தியை பரப்பியவருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைகளை கத்தார் மத்திய வங்கி பராமரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் தொழிலாளர்கள் வேலை மாற்ற புதிய நடைமுறை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…