கத்தார் போக்குவரத்து வெள்ளிக்கிழமைகளில் பேருந்து சேவைகளை ரத்து செய்துள்ளது.!

Mowasalat cancels bus services on three routes on Fridays
Pic: Shutterstock

கத்தார் அரசுக்கு சொந்தமான பொதுப் போக்குவரத்து நிறுவனம் Mowasalat (Karwa) பேருந்து சேவைகள் மூன்று வழித்தடங்களில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் தனது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து Mowasalat அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், எங்கள் பயணிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக, 101 (Al Ruwais), 102 மற்றும் 102X (Al Khor) ஆகிய வழித்தடங்களில் செப்டம்பர் 18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மீதமுள்ள வாரங்களில் இந்த வழிகள் கிடைக்கும் என்றும்  கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வார இறுதியில் வானிலையானது வெப்பமாக இருக்கும்; QMD ட்வீட்.!

கத்தாரில் பேருந்துகள், தோஹா மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் COVID-19 தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 1 முதல் 30% திறனுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

பொது பேருந்துகள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்குச் செல்லும் மெட்ரோலிங்க் சேவைகளைத் தவிர, Mowasalat சேவைகள் நாட்டின் ஏராளமான பள்ளி பேருந்துகளை இயக்குகிறது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 வழிகாட்டுதல்களை மீறிய உடற்பயிற்சி கிளப் மூடல்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…