வெளிநாட்டினர்கள் அதிகமான இடங்களில் சொத்துக்களை வைத்திருக்கலாம் – கத்தார் அரசு அனுமதி.!

Qatar allows foreigners to own properties in more areas
Pic: Qatar Day

வெளிநாட்டினர்கள் அதிகமான இடங்களில் சொத்துக்களை வாங்கி கொள்ள கத்தார் அரசானது அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக கத்தார் நேற்று (06-10-2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் நாட்டின் அதிகமான பகுதிகளில் ரியல் எஸ்டேட் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தார் குடியுரிமை இல்லாத நபர்கள் தங்களது சொத்துகளை ஒன்பது இடங்களில் மட்டுமே வைத்துகொள்ள முடியும் என்றும், வெளிநாட்டவர்கள் ரியல் எஸ்டேட் பயன்படுத்தக்கூடிய பகுதிகளின் எண்ணிக்கை 16ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் COVID-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்; MoPH

மேலும், கத்தார் தோஹாவில் உள்ள பேர்ல் தீவு (Pearl Qatar) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே ரியல் எஸ்டேட் உரிமம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முடிவு கத்தார் ரியல் எஸ்டேட் சந்தையின் முன்னேற்றத்திற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று கத்தார் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தார் தனது ரியல் எஸ்டேட் துறையின் அதிக வெளிநாட்டு உரிமையை அனுமதிக்கும்  சட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

மேலும், இந்த பகுதிகளை வெளிநாட்டு உரிமை மற்றும் முதலீட்டிற்கு தகுதியானதாக ஒதுக்குவதன் மூலம் கத்தார் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் வாய்ப்புகளை உருவாகியுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் Ali bin Ahmed al-Kuwari தனிப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 3 பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…