பிரான்ஸைத் தொடர்ந்து சவுதியிலும் தாக்குதல் – கத்தார் கடும் கண்டனம்.!

Qatar condemns stabbing incident
Pic: REUTERS

சவுதி ஜித்தாவில் அமைந்துள்ள சவுதி அரேபியாவிற்கான பிரான்ஸின் துணைத் தூதரகத்தில் சவுதி நபர் ஒருவர் அங்கிருந்த காவலாளியை கத்திக்கொண்டு தாக்கியிருக்கிறார்.

தாக்குதல் நடத்தியவனை சவுதி பாதுகாப்புப் படையினர் விரைந்து கைது செய்தனர். காயமடைந்த காவலாளி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்.!

சவுதி ஜித்தாவில் காவலாளியை கத்திக்கொண்டு தாக்கப்பட்ட இந்த சம்பவத்திற்கு கத்தார் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த காவலாளி பூரண நலம்பெற வாழ்த்துவதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரான்ஸின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கத்தியால் கொடூரமாக  கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கத்தார் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் நாட்டிற்கு கத்தார் தூதரகம் மருத்துவ உதவிகள் வழங்கல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…