கத்தார், எகிப்து இடையே மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஏற்படும் நல்லுறவு.!

Qatar Egypt resuming relations
Pic: Reuters/Wikipedia

கத்தார் உடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க எகிப்து ஒப்புக் கொண்டுள்ளதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் நேற்று (20-01-2021) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எகிப்து மற்றும் கத்தார் நாடு இரண்டு உத்தியோகபூர்வ குறிப்புகளை நேற்று  பரிமாறிக்கொண்டுள்ளதாகவும், அதன்படி இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் இந்த நகரத்திற்கு நேரடி விமான சேவைகளை தொடங்கியது.!

இதற்கு முன்னர், கத்தார் ஏர்வேஸ் கடந்த திங்கட்கிழமை (18-01-2021) முதல் எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தினசரி விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் QR 1301 விமானம் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து  புறப்பட்டு கெய்ரோ சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றடைந்தது.

மேலும், கத்தார் ஏர்வேஸ் வருகின்ற ஜனவரி 25ம் தேதி முதல் எகிப்து நகரில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் பெரும்பாலான பகுதிகளில் மோசமான வானிலை.!